×

கேரள அரசு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கேரள அரசு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கேரள அரசு கடன் வாங்க ஒன்றிய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு ஒன்றிய அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து மாநிலத்தின் நிதி நிலவரத்தை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு இருக்கும் பிரத்யேக, தன்னாட்சி அதிகாரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதாக குற்றச்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த, கே.வி விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கேரள அரசு தரப்பில் கபில் சிபில் ஆஜரானார்.

அப்போது, மாநில அரசு வாங்கும் கடனுக்கு ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் அப்படி நிபந்தனை விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னைகளை விசாரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் 131-ஆவது பிரிவு படி, உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. இது தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களில் நிதி நிர்வாகத்தில் மறைமுக கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் கேரள அரசு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கேரள அரசு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala govt ,Supreme Court ,Union ,Delhi ,Union Government ,Kerala government ,BJP ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...